திருவண்ணாமலை,
சென்னை சேலம் எட்டு வழிச்சாலைக்கு திட்டத்தால் நிலத்தை பறிகொடுத்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சேலம் 8 வழிச்சாலைத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றர். விவசாயிகளின் எதிர்ப்பை கண்டு கொள்ளாத தமிழக அரசு காவல் துறையினரை வைத்து விவசாயிகளை மிரட்டி நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு போராடும் மக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் சமூக ஆர்வலர்களையும், அரசியல் அமைப்பினரையும் கைது செய்து அவர்கள் மீது கொடூரமான அடக்கு முறைகளை கட்டவிழ்த்து வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மேல் வடக்கம்பாடி கிராமத்தில் அளவீடு செய்த போது சேகர் என்ற விவசாயிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கிணறு வீடு அனைத்தும் பறிபோகும் சூழல் ஏற்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி சேகர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சோகத்தில் ஏற்படுத்தி உள்ளது.

சேகர் தமது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.