ஜெய்ப்பூர்
ராஜஸ்தானில் தந்தையின் இறுதிச்சடங்கை 4 பெண்கள் நடத்தியதால் ஆத்திரம் அடைந்த சாதிப்பஞ்சாயத்தினர் அவர்களை ஊரை விட்ட ஒதுக்குவதாக அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
 ராஜஸ்தான் மாநிலம் பூண்டி மாவட்டத்தை சேர்ந்தவர் துர்காசங்கர். தையல் தொழிலில் ஈடுபட்டிருந்த துர்காசங்கர் பல மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்தார். இவரது கடைசி ஆசையாக தன் 4 மகள்கள் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவருக்கு மகன் இல்லை
இந்நிலையில் சனிக்கிழமை அவர் உயிரிழந்தார். அப்போது அவரது மகள்கள் அவரது உடலை அடக்கம் செய்ய முன் வந்தனர்.  இதற்கு கிராமத்தினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கிராமத்தினரின் மிரட்டலுக்கு அஞ்சாத 4 பெண்களும் தந்தை உடலை சுமந்து சென்று  இறுதிச்சடங்குகளை செய்து முடித்தனர். அவரது இறுதிச்சடங்கில் படித்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த  கிராம மக்கள் அவர்களை சாதி பஞ்சாயத்தில் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். இதனை மறுத்து அப்பெண்கள் தங்கள் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றவே இவ்வாறு செய்ததாக கூறினர்.இதையடுத்து ஆத்திரம் அடைந்த சாதி  பஞ்சாயத்தினர் அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

 

Leave A Reply

%d bloggers like this: