தில்லி

ரபேல் போர் விமான ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதராவாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருக்கிறது. தனது நண்பரின் நிறுவனம் என்பதற்காக பொதுத்துறை நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறது என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடி மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை நேரடியாக வைத்தார். இதற்கு பதலளித்து பேசிய பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் நேரடியாக பதில் அளிக்காமல், பல பொய்யான தகவல்களை சொல்லி சமாளித்தனர்.  இந்நிலையில் இந்த ஊழல் குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிகை மற்றும் ஊடகங்களை பாஜக மிரட்டி வருகிறது. இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “ரபேல் போர் விமானம் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு பின்வாங்குங்கள், இல்லையெனில் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று உயர்மட்ட தலைவர்களின் கைப்பாவைகளிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சில தைரியமான செய்தியாளர்களால் நான் மிகவும் பெருமையடைகிறேன், அவர்கள் இன்னும் உண்மையை சார்ந்து நிற்க வேண்டும், மிஸ்டர் 56 இஞ்ச்க்கு (பிரதமர் மோடி) எதிராக நிற்க வேண்டும் என்பதில் தைரியமாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: