சென்னை,
பல போராட்டங்களில் வெற்றி கண்ட திமுக தலைவர் மு. கருணாநிதி உடல்நலம் பெற்று மீண்டு வருவார் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.  அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஞாயிறன்று (ஜூலை 29) மருத்துவமனைக்கு சென்றார். அங்கு திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,“ திமுக தலைவர் கலைஞரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறி னார்கள். அவர் விரைவில் பூரண குணமடைந்து வருவார் என நம்புகிறோம்” என்றார்.

திமுக தலைவர் கலைஞர் குணமடைந்து தமிழக அரசியலில் மட்டு மன்றி இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்ற வேண்டும். அவர் பல சோதனைகளை கடந்து வந்துள்ளார். பல போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் உடல் நலக் குறைவு போராட்டத்திலும் வெற்றிபெற்று மீண்டு வருவார் என்றும் யெச்சூரி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், எஸ்.ஏ.பெரு மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: