வேலூர்,
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வேலூர் மாவட்ட மாநாடு காட்பாடியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு டி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோபால ராஜேந்திரன் வேலை அறிக்கையை முன்வைத்தார். பொருளாளர் வீரபாண்டியன் வரவு – செலவு அறிக்கை தாக்கல் செய்தார். மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநில துணைத்தலைவர் சாந்தி நிறைவுரையாற்றினார்.மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உதவித் தொகையாக ரூ. 3 ஆயிரமும், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கவேண்டும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரசு ஒதுக்கும் எம்.பி நிதி ரூ.10 லட்சமும், எம்எல்ஏ நிதிரூ. 5 லட்சமும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகமட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 100 நாள் வேலை மற்றும்நலத்திட்டங்கள் குறித்து அனைத்து அதிகாரிகளும் தெரிந்து வைத்திருக்க வேண்டும், உதவித்திட்டங்கள் பெற வருபவர்களை உதாசினப்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக டி.கோவிந்தராஜ், செயலாளராக கோபால ராஜேந்திரன், பொருளாளராக வீரபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.