கடலூர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினாவின் தாயார் கஸ்தூரி அம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொளார்கிராமத்தில் கஸ்தூரி அம்மாளின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் டி.ஏழுமலை, என்.சுப்பிரமணியன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜி. ஆனந்தன், கோ.மாதவன், மூசா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநில பொருளாளர் மல்லிகா, மாநில நிர்வாகிகள் பிரமிளா, சசிகலா, முத்துராணி, ராணி, அலமேலு, மேரி, தேன்மொழி, வாலிபர் சங்க மாநிலத் தலைவர் செந்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், வி.உதயகுமார், என்.எஸ்.அசோகன், எஸ்.திருஅரசு, விவசாய சங்க தலைவர்கள் பி.கற்பனைச்செல்வம், எஸ்.தட்சணாமூர்த்தி, எஸ்.காமராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு, தொளார் இடுகாட்டில் திங்கட்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் ஜி.ராமகிருஷ்ணன், உ.வாசுகி ஆகியோர் தொலைபேசியில் வாலண்டினாவிற்கு ஆறுதல் கூறினர்.  கஸ்தூரியின் கணவர் விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான என்.செல்லபெருமாள். மூத்த மகள் எஸ்.வாலண்டினா. அவருடன் பிறந்தவர்கள் அருணா, சுமதி, மைதிலி ஆகியோர்களாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.