குருவாயூர்;
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தொடுபுழாவை சேர்ந்தவர் ஹனான்
(20). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி வேதியியல்
மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.மாணவி ஹனான் கல்லூரி முடிந்ததும் சீருடை
யுடன் அந்த பகுதியில் உள்ள சந்தையில் மீன் விற்பனை செய்து வந்தார். தனது குடும்பம் ஏழ்மையில் வாடுவதாகவும் தனது குடும்பத்தை காப்பாற்றவும் படிப்பு செலவுக்காகவும் தான் படிக்கும் நேரம் தவிர இதுபோல மீன் விற்பனை செய்து வருவதாகவும் ஏழுவயது முதலே இதை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹனான் குறித்த இந்த செய்தி சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் வெளியானது. மாணவியின் ஏழ்மை நிலையை உணர்ந்த பலரும் அவருக்கு உதவ முன் வந்தனர். அதே சமயம் அந்த மாணவி பள்ளிசீருடையுடன் மீன் விற்பனை செய்வதற்கு எதிரான கருத்துக்களும் பரவின.
கேரள முதல்வர் பினராயி விஜயன், மாணவியின் மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் பாராட்டினார். மாணவி மீன்விற்கும் படத்தை பினராயி விஜயன் தனது பேஸ்புக்
பக்கத்தில் வெளியிட்டு ஆதரவு தெரிவித்திருந்தார். மாணவி ஹனான் பற்றி
அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினருக்கு பினராயி விஜயன் உத்தர விட்டார். மாணவி பற்றி அவதூறு பரப்பிய வயநாடு பகுதியைச் சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். இந்நிலையில், குருவாயூரைச் சேர்ந்த விஸ்வநாதனை (36), போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: