தேனி:
மதுரை- போடி அகலரயில் பாதை திட்டத்துக்கு தேவையான முழு நிதியை
யும் வரும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யக்கோரி போடியில் அக்டோபா் மாதம்
போராட்டம் நடைபெறுமென அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக்குழு தலைவர் ஏ.லாசர் தெரிவித்துள்ளார்.போடியில் ரயில்வே நிலையம் தங்கப்பாலம் கட்டுமானப் பணி உசிலம்பட்டி முதல் வடபழஞ்சி வரை நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகளை பார்வையிட்ட பின்னா் தேனியில் திங்களன்று செய்தியாளர்களிடம் பெரியகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஏ.லாசா் கூறியதாவது: மதுரை- போடி அகல ரயில் பாதையில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரையிலான ரயில் பாதை பணி 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளும், உசிலம்பட்டியிலிருந்து போடி வரையிலான ரயில் பாதை பணி 2019-ம் ஆண்டு மாதத்துக்குள்ளும் முடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் மதுரை- உசிலம்பட்டி இடையே 15 சதவீத பணிகள் மட்டுமே இதுவரை முடிவ
டைந்துள்ளன. எனவே மார்ச்- உசிலம்பட்டி இடையே யான பணிகள் கூட 2019 மார்ச்
மாதத்துக்குள் முடிக்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது.போடியில் பெரிய ரயில்
நிலையம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியில் பெரிய பாலம் கட்டுவ
தற்கான பணிகள் தற்போது தான் தொடங்கியுள்ளன. இதனால் தேனி மாவட்ட
மக்கள் மிகுந்த அதிருப்தி யில் உள்ளனர்.

தற்போது மதுரை- போடி ரயில் பாதை பணியை முடிப்பதற்கு ரூ.400 கோடி தேவைப்படுகிறது. எனவே வரும் பட்ஜெட்டில் இந்த பணிக்கு தேவையான முழு நிதியையும் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ரயில் பாதை பணியை துரிதப்படுத்துவது குறித்து பலமுறை வலியுறுத்தி
யுள்ளோம். எனவே இந்த பணியை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.பேட்டியின் போது அகலரயில் பாதை திட்ட அமலாக்கக்குழு செயலாளா் பி.சி.
ராஜேந்திரன், நிர்வாகிகள் கே.ராஜப்பன், பா.ராமமூா்த்தி, எல்.ஆா்.சங்கரசுப்பு, சி.முனீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

Leave a Reply

You must be logged in to post a comment.