கடலூர்,
பெருமாள் ஏரியை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோ.மாதவன், பொருளாளர் எஸ்.தட்சணாமூர்த்தி, பெருமாள் ஏரி விவசாயிகள் சங்கம் எம்.ரவிச்சந்திரன் ஆகியோர் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள பெருமாள் ஏரிமுழுவதும் பல ஆண்டுகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனை அகற்றவும், பெருமாள் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியின் 11 பாசன வாய்க்கால்களில் 3 வாய்க்கால்கள் மட்டும் தூர்வாரப்பட்டு உள்ளது. சம்பாரெட்டிப்பாளை யம், பூவாணிக்குப்பம் பாசனவாய்க்காலில் இருக்கும்கால்வாய், மதகுசெயல் படாமல் உள்ளது. இதனை சீர்படுத்திட வேண்டும். பூவாணிக்குப்பம்பாசன வாய்க்கால் மூலம் 2000 ஏக்கர் சாகுபடிசெய்யப்படு கின்றது. இந்த வாய்க்கால் முற்றிலும் தூர்ந்து போய் உள்ளது. இதனையும், மற்ற பாசன வாய்கால்களையும் தூர்வாரநடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேருந்து…
குறிஞ்சிப்பாடி-போட்டோடை (தடம் எண் 39) நகரப் பேருந்து தினமும் 4 முறை இயக்கப்பட்டது. இதனை படிப்படியாக குறைந்து தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மேட்டுப்பாளையம், சம்பாரட்டிப்பாளையம், ஆதிநாராயணபுரம், தானூர், தெற்கு பூவாணிக்குப்பம், பள்ளிநீரோடை, ராவணாங்குப்பம், சிந்தாமணிக்குப்பம், குள்ளஞ்சாவடி பகுதி மக்கள்இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

%d bloggers like this: