குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) செயல்பட்டு வருகின்றன. இதில் சேர 14 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு உச்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிட்டர், டர்னர், கம்பியர் (குளிர்பதனம்) கம்பியர் (மோட்டார் வண்டி) மின்சாரப்பணியாளர், கம்பியாளர், வெல்டர் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்பியாள், தச்சர் தொழிற்பிரிவுகளுக்கு அனைத்து பிரிவினரைச் சார்ந்த மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கூடலூரில் உள்ள பழங்குடியனருக்காக இயங்கும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகிய இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் காலியாக உள்ள பொருத்துநர், கம்பியர், மோட்டார் வண்டிகம்பியாள், வெல்டர், பிளம்பர் ஆகியதொழிற் பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவிகள் மட்டும் (www.skiltraining.tn.gov.in) என்ற இணையதளத்தில் 27.07.2018 முதல் 11.08.2018 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களுக்கு குன்னூர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி எண் 0423- 2231759, 2233010 ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் கூடலூர் பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் 0426 – 2263449 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.