சென்னை
முதல்வர் நலம் விசாரிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மூச்சுத் திணறல்
காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்
செல்வம் மற்றும் அமைச்சர்கள் திங்களன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

புதுதில்லி
பயிற்சியாளர் விளக்கம்
தடகள நட்சத்திர வீராங்கனை ஹிமா தாஸின் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. ‘என் மீது சுமத்தப்பட்ட குற்றம் பொய்யானது. நான் குற்றவாளி என்றால்
நிச்சயம் தண்டிக்கப்படுவேன். நான் சுத்த மானவன்; நான் அப்பாவி. என்னிடம் பயிற்சி பெறும் மாணவிகளிடம் கேட்டுப்பாருங்கள்’ என நிபான் தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

ஜகார்த்தா
மீட்புப் பணி தீவிரம்
இந்தோனேசியாவின் லாம்பாக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தீவில் உள்ள ரிஞ்சனி எரிமலைச் சரிவில் 820 பேர் சிக்கியுள்ளனர். இவர்களில், 617 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மலை யேற்றத்தில் ஈடுபட்டிருந்த இவர்களில் 246 பேர் வெற்றிகரமாகத் தப்பித்து வெளி யேறிவிட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை
அர்ச்சகராக நியமனம்
2005-ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது த மிழகத்தில் பிராமணர் அல்லாதவர் களுக்கும் அர்ச்சகர் பணி வழங்கலாம் என்று  முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2007-08-ம் ஆண்டு அனைத்து சாதியி லிருந்தும் 206 பேர் அர்ச்சகர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதில், ஒருவருக்கு தற்போது பணி நியமனம் வழங்கப்பட்டுள் ளது.

வாஷிங்டன்
தமிழர் மீது தாக்குதல்
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் மஸ்ஸா சூஸெட்ஸ் மாகா
ணத்தில் இருந்து தமிழரான சிவா அய்யாத் துரை சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஞாயிறன்று நடைபெற்ற பிரச்சாரத்தின்போது அய்யாத்துரையை நோக்கி வந்த அமெரிக்கர் ஒருவர் ஒலிபெருக்கியால் சிவாவின் வாயில் குத்தினார். இதனால் அப்பகுதி
யில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுதில்லி
ரயில் தற்காலிக நிறுத்தம்
கடந்த சில நாள்களாக வட மாநிலங் களில் கன மழை கொட்டி வருகிறது. பல பகுதி
களில் வெள்ளம் சூழ்ந்து அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் தில்லி
யில் உள்ள பழைமையான, யமுனா இரும்பு பாலத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிக மாக நிறுத்தப்பட்டுள்ளது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

புதுதில்லி
காத்திருக்கும் வாட்ஸ்அப்!
பேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப் நிறுவனம், தனது ஆப் மூலமாக பணப்பரிமாற்றம் செய்யும் சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு இந்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக சோதனைமுயற்சியாக வாட்ஸ்அப் மூலமாக தொடங்கப்பட்ட பணப்பரிமாற்ற சேவை 10லட்சம் பயனாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

திருவனந்தபுரம்
நடிகர்களுக்குத் தடை?
நடிகர் திலீப் விவகாரம் உள்ளிட்ட எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பொது வெளியில் நடிகர், நடிகைகள் கருத்து தெரி விக்கக்கூடாது. பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என மலையாள நடிகர் சங்கமான `அம்மா’ கட்டுப்பாடு விதித்துள்ளது.

குளச்சல்
இன்று மரியாதை
1741-ம் ஆண்டு நடைபெற்ற போரில் டச்சுப் படையை திருவிதாங்கூர் சமஸ்தான
படை தோற்கடித்தது. அந்த நினைவாக,குளச்சலில் வெற்றித்தூண் நிறுவப்பட் டுள்ளது. வெற்றித்தூண் நிறுவப்பட்ட 277-வது  ஆண்டை முன்னிடு செவ்வாயன்று காலை துப்பாக்கித்தோட்டாக்கள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.