அகமதாபாத்
குஜராத் நீதிமன்றத்தில் தி வயர் செய்தி ஊடகம் மீது அதானி தொடுத்த மான நஷ்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு  ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று தி ஒயர் என்னும் செய்தி ஊடகம் பிரண்ஜாய் குகா என்ற பொருளாதார நிபுணர் எழுதிய செய்திக் கட்டுரையை வெளியிட்டது.  மோடி அரசு சிறப்பு ஏற்றுமதி பகுதிக்கான விதிகளை அதானி நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றி உள்ளது என்று ஆதாரங்களுடன் அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.  மேலும் அதானிக்கு சொந்தமான நிறுவனம் உற்பத்திக்கான பொருட்கள் வாங்குவதில் முறைகேடு செய்ததால் ரூ. 500 கோடி லாபம் ஈட்டியதாக அந்த செய்தியில் கூறப்பட்டது.
இந்த செய்திக்கு அதானி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து நோட்டிஸ் அனுப்பியது.  அதனால் அந்த  செய்தியை ஊடகம் நீக்கியது.  அதன் பிறகு முதலில் கட்டுரை வெளியான ஊடகத்தின் ஒப்புதலுடன் தி ஒயர் மீண்டும் வெளியிட்டது. இதையடுத்து அதானி நிறுவனம் கட்டுரையை எழுதிய பிரண்ஜாய் மற்றும் தி ஒயர் ஊடகம் ஆகியோரின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது சரியான காரணம் இல்லாமல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து கூடுதல் செஷன்ஸ் நீதிபதி என் ஆர் ஜோஷி உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.