ராஞ்சி :

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியின் கண்கே என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இதேபோன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தில்லியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் இது நடந்துள்ளது. தில்லி சம்பவம் குறித்த வழக்கு விசாரணை இன்னும் நடைபெற்றுவரும் நிலையில் இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தற்கொலைக்கு பண பிரச்சனை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையின் முதற்கட்டத் தகவலில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: