ஈரோடு,
உயர்த்தப்பட்ட சொத்து வரி மற்றும் வீட்டு வரி உயர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஈரோடுமாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிராபகரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது. ஈரோடு மாநகராட்சியில் கடந்த நிதியாண்டில் சொத்து வரி, வீட்டு வரி, தொழில் வரி, பாதாள சாக்கடைக்காக டெபாசிட் வரி, தொழில் நடத்த உரிமை கட்டணம் வரி, புதிய கட்டிடங்களை கட்டினால் சொத்து வரியையும் சேர்த்து நிரந்தரமாக அபராத கட்டணம் என பொதுமக்கள் செலுத்தி வருகிறார்கள். தற்போது, பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரியால் மாநகரில் வணிகம், தொழில் பாதிப்பிற்குள்ளான நிலையில் அரசு 100 சதவிகித வரி உயர்வை அறிவித்துள்ளது.ஏற்கனவே, மாநகராட்சி, நகராட்சி பகுதியில் புறநகர் பகுதிகளை இணைத்து இருப்பதாலும், ஒரே வரியில் ஒரே பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு வேறுபட்டவரிகள் உள்ளது. இதை சரிசெய்து புறநகர் பகுதிகளில் 20 சதவிகிதத்துக்கும் மேல் பல்லாண்டு காலமாக வரி வசூலிக்கப்படாமலேயே உள்ள கட்டிடங்களை கண்டறிந்து வரி விதிப்பு செய்வதன் மூலம் மூலமும், உள்ளாட்சிகளில் வாடகைக்கு விடப்படாமல் உள்ள கட்டிடங்களையும், காலி இடங்களையும் வாடகைக்கு விடுவதன் மூலமும், பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலித்தும், மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய மானியத் தொகையை போராடி பெற்றால் மட்டுமே வரி உயர்வை தவிர்க்க முடியும். ஆகவே, உள்ளாட்சியால் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் வரும் வரை வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: