உத்திரமேரூர்,
‘என் நிலம்-என் உரிமை’ என்ற முழக்கத்தோடு ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருவண்ணாமலையில் துவங்கும் நடைப்பயணத்தில் காவல் துறை எத்தனை முறை கைது செய்தாலும் மீண்டும் மீண்டும் நடப்போம் என உத்திரமேரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் கூறினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்திரமேரூர் வட்டக்குழு அலுவலக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பொதுக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. வட்டச் செயலாளர் சொ.பாஸ்கரன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வா.பிரமிளா, மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.மோகனன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.ஜெயந்தி உள்ளிட்ட பலர் உரையாற்றினர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன்,“ சேலத்தில் இருந்து சென்னைக்குஏற்கனவே பல சாலைகள் இருக்கிறது. அந்த சாலைகளை பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தலாம், மாடிச் சாலை கள் அமைக்கலாம். அதை செய்யாமல், பல ஆயிரம் ஏக்கர் நிலம், ஏரி, ஆறு, கால்வாய் நிலத்தை அழித்து ஏன் சாலை அமைக்க வேண்டும் என்று கேட்டால் அரசு தனது அதிகாரத்தைக் காட்டுகிறது” என்றார். நிலம்,காற்று குடிதண்ணீர் மாசு அடைகின்றது. தொழிற் சாலையை மூடவேண்டும் என மக்கள் போராடினால் தொழிற் சாலை நடத்துவது அவர்களின் உரிமை என போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது அரசு. காவேரி, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகளின் கரைகளில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஆபகரித்து வைத்திருக்கும் கார்பரேட்டுகளை இந்த அரசுகளால் காலி செய்திட முடிமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பத்தாயிரம் ஏக்கருக்கு மேலாக நிலம் வைத்திருப்பவர்களிடம் நிலங்களை எடுக்காத அரசு, ஒன்று இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயிகளின் நிலத்தை பிடுங்க நினைக் கிறது. அவசியம் இல்லாமல் விவசாயிகளிடம் இருக்கும் நிலங்களை கைப்பற்ற நினைத்தால் கம்யூனிஸ்ட்கள் உயிரைக் கொடுத்தும் தடுத்து நிறுத்துவோம் என்றார் சவுந்தரராசன்.

Leave a Reply

You must be logged in to post a comment.