சேலம்,
சேலம் மாநகரில் ஏரிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

 சேலம் மாநகரம் எருமாபாளையம், ஜெய்நகர், அம்மாள் ஏரி, காட்டூர் ஏரி, குமரகிரி ஏரி ஆகிய ஏரிகளில் கட்டிடங்கள், தனியார் தொழிற்சாலைகள், வியாபார ஸ்தலங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் பெருகி ஏரியின் அளவு குறைந்து ஏரிகள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஊத்துமலையில் இருந்து அம்பாள் ஏரிக்கு வரும் ஓடைகள் அழிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சண்ணியாசிகுண்டு மலை பகுதியில் ஜெய் நகர் பகுதிக்கு வரும் ஓடைகள் அழிக்கப்பட்டுவிட்டது. இதனால் மழை காலங்களில் அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், காந்தி நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அம்மாபேட்டை பகுதியில் சாக்கடை நீரில் சிறுவன் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி இயற்கை இடையூறுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று வாலிபர் சங்க கிழக்கு மாநகர செயலாளர் பெரியசாமிதலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அக்கப்பட்டது. இம்மனுவினை அளிக்கையில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார், பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.