மதுராந்தகம்,
கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு 2016-17ம் ஆண்டிற்கு தரவேண்டிய எஸ்ஏபி தொகை ரூ. 450-ம், 2017- 18ம் ஆண்டிற்கு கூடுதல் விலை ரூ. 200-ம் உடனடியாக வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மதுராந்தகத்தை அடுத்த படாளம் கூட்டுச் சாலையில் சங்கத்தின் தலைவர் வி.கே.பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கரும்பு பிழித்திறன் என்ற அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வதைக் கைவிட வேண்டும், கரும்பு பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் காப்பீடு பிரிமியம் செலுத்தியவர்களுக்கு நட்ட ஈடாகக் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,  விதை கரும்பு . உரம் மானிய விலையில் வழங்க வேண்டும், கரும்பு சக்கையில் மின் சாரம் உற்பத்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. மோகனன், செயலாளர், கே. நேரு, மதுராந்தகம் வட்டத் தலைவர் நாகேஷ், செயலாளர் வி. பொன்னுசாமி, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், கெம்பு, எட்டியப் பன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ராஜா உள்ளிட்ட பலர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.