ஈரோடு,
உலர் கலம் மற்றும் மயானம் அமைத்து கொடுக்க வலியுறுத்தி மேற்குப்பாளையம் பகுதி மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம் காகம் ஊராட்சி மேற்குப்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலான குடும்பங்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்கள் வசிக்கும் பகுதியில் உலர் கலம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அப்போது போதுமான நிதி இல்லாத காரணத்தால் உலர் கலம் அமைக்கு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. உலர் கலம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் நத்தம் புறம்போக்கு 514/3 உள்ள இந்தப் பகுதியில் கசிவுநீர் குளம் அமைந்துள்ளது. இரண்டு புறமும் தார்சாலையும் மீதமுள்ள இடத்தில் மயானம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த இடத்தினை தனியாருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவருகிறது. ஆகவே தாங்கள் உரிய விசாரணை செய்து பட்டா வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். உலர் கலம் மற்றும் மயானம் அமைத்துக்கொடுக்க நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதிமக்கள்திங்களன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிராபகரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.