நியூயார்க்:                                                                                                                                                                             ஐரோப்பா நாடுகளில் நடத்தப்படும் கால்பந்து லீக் தொடர்களில் கலக்கிய முதிர்ந்த வீரர்கள்,அமெரிக்காவில் மேஜர் லீக் சாக்கர் (MLS) தொடரில் களமிறங்குவது வழக்கம்.பெரும்பாலும் 30 வயதைத் தாண்டிய அனுபவ நட்சத்திரங்கள் மட்டுமே இந்த மேஜர் லீக் சாக்கர் தொடரில் களமிறங்குவதால் தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாகவே நடைபெறும்.            திங்களன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எல்ஏ கேலக்சியும்,ஓர்லாண்டோ சிட்டியும் மோதின.மிக பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எல்ஏ கேலக்சி 4-3 என வெற்றி பெற்றது.சுவீடன் நாட்டின் தலைசிறந்த வீரர் இப்ராஹிமோவிச் எல்ஏ கேலக்சி அணி சார்பில் களமிறங்கி 47,67,71 ஆகிய நிமிடங்களில் ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார்.
ஆட்டத்தின் 54-வது நிமிடம் வரை ஓர்லாண்டோ சிட்டி 3-2 என முன்னிலைப் பெற்றிருந்தாலும்,இப்ராஹிமோவிச் ஹாட்ரிக் கோலால் எல்ஏ கேலக்சி அணி திரில் வெற்றியை ருசித்தது.
36 வயதாகும் இப்ராஹிமோவிச் எந்தத் தொடராக இருந்தாலும் களத்தில் பம்பரமாகச் சுழலக்கூடியவர்.ஆனால் ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் நிர்வாக பிரச்சனை காரணமாக இப்ராஹிமோவிச்சை சுவீடன் அணி நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

You must be logged in to post a comment.