மோட்டார் வாகனங்கள் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. மாநிலங்களவையிலும் நிறைவேற்றுவதற்கு மோடி அரசு பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறது. இம்மசோதாவிற்கு பொதுமக்களின் ஆதரவை பெற நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் அரசு அமோகமாக விளம்பரம் செய்து வருகிறது. நம் நாட்டில் ஆண்டு தோறும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் மரணமடைகின்றனர். எண்ணற் றோர் படுகாயம் அடைகின்றனர். கை, கால் முடங்கு கின்றனர். இது நம் அனைவருக்குமே கவலை அளிக்கும் விசயமாகும். சாலை விபத்துக்களை குறைத்து சாலை பயண பாதுகாப்பு உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை கள் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. மக்களின் பாதுகாப்பு குறித்து உண்மையிலேயே அரசுக்கு அக்கறையிருக்குமானால் எத்தகைய என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்? மோட்டார் வாகனங்கள் திருத்த மசோதாவில் இதற்கான ஆலோசனைகள் உள்ளதா? மசோதா யாருக்கு பயனளிக்க போகிறது?  80 சதவீத விபத்துக்களுக்கு ஓட்டுனர்களே காரணம் என மசோதா கருதுகிறது. இது முற்றிலும் தவறானது; திசைதிருப்பக்கூடியது. தில்லி (IIT) இந்திய தொழில் நுட்பக்கழக பேராசிரியர் கீதம் தீவாரி நடத்திய ஆய்வின்மூலம் ஓட்டுனர்களின் கவனக்குறைவினால் 10 சதவிகித விபத்துக்களே ஏற்படுகின்றன. ஏதோ சாலைகளில் மக்களை கொன்று குவிக்கும் நோக்கத்துடன் ஓட்டுநர்கள் தங்களது வேலை நாளை துவங்குவதுபோல் அரசு சித்தரிக்கிறது. பணியில் உள்ள ஓட்டுனரோ அல்லது சொந்தமாக கார் ஓட்டுபவர்களோ விபத்துக்களை தவிர்க்கவே விரும்புவார்கள். ஏனெனில் விபத்துக் களினால் அவர்களது உயிருக்கு மட்டுமல்ல, அவர்களது குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். பொதுவாக பெரும்பாலான ஓட்டுனர்கள் வண்டிகளை எடுப்பதற்கு முன் விபத்துக்கள் ஏற்படக்கூடாது என இறைவனிடம் வேண்டிக்கொள்கின்ற னர். சாலைகளை கடக்கும் அங்கிங்கு திரியும் மிருகங்கள் பறவைகளைக்கூட முடிந்த அளவு விபத்துக்களில் சிக்கி அடிபடாமல் இருக்கவே ஓட்டுனர்கள் அதிகபட்சம் முயற்சிக்கின்றனர்.

சாலை விபத்துக்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சாலை கட்டுமானத்தில் உள்ள குறைகள், அனைத்து வகையான வாகனங்களும் ஒரே பாதையில் செல்வது, சாலை பாதுகாப்பு, சாலை விதிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாதது போன்ற வைகளே விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணம்.  நவீன தாராளமயக் கொள்கையில் ஒரு பகுதியாக, பொது போக்குவரத்தை குறைக்கவும், மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களை கலைத்துவிடவும், அரசு முயற்சிக்கிறது. குறைந்த வட்டியில் வங்கி கடன்கள் வழங்குவது போன்றவைகள் மூலம் தனி நபர் கார் உபயோகம் தீவிரமாக ஊக்குவிக்கப்படுகிறது. இது மோட்டார் வாகன உற்பத்தியாளர்களை, குறிப்பாகபன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்களுக்கு சாதக மானது. பொது போக்குவரத்து வசதி குறைவின் காரணமாக, சிலர் தனியாக சொந்த வாகனங்களை வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். நவீன பணக்காரர்களின் ஒரு பகுதியினர் உயர் வேக கார்களை சொந்த உபயோகத்திற்கு வாங்குகிறார்கள். இதன் விளைவாக கார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் இதற்கேற்ப சாலை நிலைமைகளை சீர்படுத்தவோ, அபிவிருத்தி செய்யவோ இல்லை.

மாநில அரசுப் போக்குவரத்து பஸ்கள், தனியார் பஸ்கள், டிரக் ஓட்டுனர், சொந்த கார் ஓட்டுபவர்களின் பணிச்சுமை கூடுதலாகியுள்ளது. பெரும்பாலான ஓட்டுனர்கள், குறிப்பாக தனியார் பஸ்கள் மற்றும் டிரக் ஓட்டுனர்கள் அதிக நேரம், தினசரி 10-12 மணி நேரம் பணி செய்கின்றனர். அவர்களுக்கு வாகனங்களை நிறுத்தவோ, ஓய்வெடுக்கவோ முறையான வசதி சாலைகளில் இல்லை.  சாலை விபத்துக்களை குறைப்பதில் அரசு உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு உரிய முன்னுரிமை கொடுத்து தீர்வு கண்டிருக்க வேண்டும். ஓட்டுனர்களை மட்டுமே விபத்துக்களுக்கு பொறுப்பாக்கி அபராதம் விதிப்பது, சிறை தண்டனை விதிப்பது விபத்துக்களை குறைக்க உதவாது. தண்டனைகளால் ஊழல் அதிகரிக்கும். மேலும்  அபராதம் மற்றும் சிறைத் தண்டனை என்பது குற்றம் செய்தவர்களை குற்றத்தை உணர வைத்து திரும்பவும் குற்றம் புரியாமல் இருக்க வேண்டுமென்பதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். ஆனால் மோட்டார் வாகன திருத்த மசோதாவில் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம், ஓட்டுனர் உரிமம்ரத்து, சிறைத் தண்டனை போன்ற தண்டனை நடவடிக்கைகளே உள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கோ, குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கோ மசோதா அழுத்தம் கொடுக்கவில்லை. அதற்கு மாறாக மக்களை கிரிமினல்கள் போல் பாவித்து தண்டிப்பதே மசோதாவின் நோக்கமாக உள்ளது. உதாரணமாக ஹெல்மெட் அணியாமல் போனால் ரூபாய் 1000 அபராதம். மூன்று மாதத்திற்கு லைசென்ஸ் நிறுத்தி வைப்பது; காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம், தேவையற்ற இடங்களில் ஒலிப்பான்களை (Horn) பயன்படுத்தினால் முதல் முறை ரூ.1000 அபராதம். இரண்டாவது முறை என்றால் ரூ.2000 அபராதம் என்றெல்லாம் மசோதாவில் உள்ளது. இத்தகைய அத்துமீறல்களை விழிப்புணர்வு மூலம் குறைக்க முடியும். ஏனெனில் அவை அவர்களின் பாது காப்பு சம்மந்தப்பட்டது. இதைச் செய்வதற்கு பதிலாக அரசு தண்டிக்க விரும்புகிறது. மேலும் மாநில அரசு அபராதங்களை 10 மடங்காக உயர்த்தவும் முடியும்.

வாகனங்கள் ஓடுவதற்கு தகுதியானது என சான்று வழங்குவது, ஒரிஜினல் உதிரி பாகங்களை பயன்படுத்துவது குறித்து திருத்த மசோதாவில் உள்ள ஷரத்துக்கள் பெரிய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்களுக்கு சாதகமானது. சிறு உதிரி பாக உற்பத்தி செய்வோர் இவர்களி டம் வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இன்சூரன்ஸ் குறித்த ஆலோசனைகளும் சாமானிய மக்களின் நலன்களுக்கு எதிரானது.  நவீன தாராள மய கொள்கைகளை விசவாசமாக அமலாக்குகிற மோடி தலைமையிலான பாஜக அரசின் உண்மையான நோக்கம், இந்த மசோதா மூலம் உள்நாட்டு வெளிநாட்டு ஆட்டோ மொபைல் உற்பத்திகம்பெனிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகளின் நலன்களை பாதுகாப்பதே. இது சாலை பாதுகாப்பு என்ற போர்வை யில் வெளிப்படுகிறது.

சாலை விபத்துக்களை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
அனைத்து வகையான சாலை போக்குவரத்து தொழிலாளிகளையும் திரட்டி பாடுபடுகிற அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (AIRTWF), சாலை விபத்துக்களை குறைக்க பின் வரும் திட்டவட்டமான ஆலோசனைகளை முன் வைக்கிறது.

l சாலை கட்டுமானத்தில் உள்ள குறைகளைப் போக்கிடு!

l அரசு போக்குவரத்துக் கழகங்களை பலப்படுத்து; பொது போக்குவரத்தை ஊக்கப்படுத்து! ஒரே இடத்திற்கு செல்லும் பலர் ஒரே காரில் செல்வதன் மூலம் வாகனங்களின் எண்ணிக்கை குறையும்.

l தனி நபர் கார் போக்குவரத்தை ஊக்குவிக்காதே!

l துவக்கம் என்ற முறையில், தேசிய நெடுஞ்சாலை களில்/ அதி விரைவு சாலைகளில் கனரக வாகனங்களுக்கும், மற்ற வாகனங்களுக்கும் தனித்தனியான பாதை ஒதுக்கு!

l நெடுஞ்சாலைகளில் நேர் எதிர் (‘U’ Turn) திருப்பங் களில் பெரியளவில் எச்சரிக்கை போர்டுகளை வை!

l அனைத்து டிராபிக் சிக்னல்களிலும் சிக்னல் அமைப்பை மேம்படுத்து! சிக்னல் நேரம் இறங்கு முகமாக வெளிப்படுத்து!

l அனைத்து சந்திப்புகளிலும் பாதசாரிகள் சாலைகளை பாதுகாப்பாக கடப்பதை உறுதி செய்!

l மத்திய மாநில அரசு பாடத்திட்டங்களில் ஐந்தாம் வகுப்பு முதலே, சாலை பாதுகாப்பு, டிராபிக் விதிகள் சேர்க்க வேண்டும்.

l பயணிகள் பஸ்கள்/ டிரக்குகளின் ஓட்டுனர்களின் பணி நேரம் ஒழுங்குபடுத்து!

l 100கி.மீ தூரத்திற்குள், ஓட்டல்/ மோட்டல் பார்க்கிங் வசதி, எரிபொருள் நிரப்பும் வசதி, சிற்றுண்டி வசதி ஏற்பாடுகளை உறுதிப்படுத்து!

சாலை போக்குவரத்து தொழிலாளர் திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள். மசோதா ஓட்டுனர்கள் மீது பெரும் சுமை சுமத்துவதுடன் சாதாரண குடி மக்களையும் பாதிக்கக்கூடியது. திட்ட வட்டமான மாற்று ஆலோசனைகளை முன்வைத்து சாலை பாதுகாப்பிற்காக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். ஆகஸ்ட்-7ல் மோட்டார் வாகன திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்வது என அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளன. இப்போராட்டத்திற்கு அனைத்து பகுதி மக்களின் ஆதரவையும் திரட்டுவது என்று முடிவு செய்துள்ளது.  2018 செப்டம்பர் 5ல் தில்லி நாடாளுமன்ற முற்றுகை மூலம் மோட்டார் வாகன திருத்த மசோதாவை திரும்ப பெற அரசை நிர்பந்திப்போம். ஆயிரத்தில் ஒருவர் நலன் முக்கியமா? அல்லது தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது பேரின் நலன் முக்கியமா? இந்த கேள்விக்கு செப்டம்பர் -5ல் தில்லியை குலுங்க வைக்கும் முற்றுகை, ஆகஸ்ட்-9ல் தேசம் தழுவிய மறியல், ஆகஸ்ட்-7ல் சாலை போக்குவரத்து தொழிலாளிகளின் அகில இந்திய வேலை நிறுத்தம்/ மறியல் விடைகூறும்.

Leave a Reply

You must be logged in to post a comment.