சென்னை,
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தா.பாண்டியனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத்தலைவர் தா.பாண்டியனுக்கு சனிக்கிழமையன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தேவையான உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், ஏ.ஆறுமுகநயினார் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 29) மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர். தா. பாண்டியன் விரைவில் பூரண குணமடைந்து இயக்கப் பணிகளில் ஈடுபட வேண்டுமென வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

ஸ்டாலின் சந்திப்பு
முன்னதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு உள்ளிட் டோர் தா.பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.  தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், சிபிஐ தேசியச் செயலாளர் து.ராஜா உள்ளிட்டோ ரும் தா.பாண்டியனை சந்தித்து விசாரித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: