கோழிக்கோடு,
அரசியல் நோக்கங்களுக்காக எஸ்என்சிலாவ்லின் வழக்கு மீண்டும் தோண்டி எடுக்கப்படுவதாக சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது பாஜகவும் காங்கிரசும் தயாரித்துள்ள அரசியல் நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியே சிபிஐயின் செயல்பாடு எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஞாயிறன்று கோழிக்கோட் டில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கொடியேரி பாலகிருஷ்ணன், ‘‘அனைத்து நாடாளுமன்ற தேர்தல் காலங்களிலும் அரசியல் நோக்கத்துடன் உயர்த்திப் பிடிக்கும் பிரச்சார ஆயுதம் லாவ்லின். இந்த வழக்கில் பினராயி விஜயன் குற்றவாளி அல்ல. சிபிஐ நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் உண்மை வெளிப்பட்டது போல் உச்சநீதிமன்றத்திலும் உண்மை தெளிவாகும்’’ என்றார். சட்டப்பூர்வமான செயல்களை சட்டப்பூர்வமாகவே எதிர்கொள்ள உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: