தும்கூர்:
கர்நாடகத்தில் உள்ள தும்கூரில் தேசிய அளவிலான 32-ஆவது மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி (7 வயதுக்குட்பட்டோருக்கான) நடைபெற்றது.

இந்த தொடரில் 5 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சண்டிகரைச் சேர்ந்த சான்வி அகர்வால் என்ற 4 வயது குழந்தை 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.இந்தப் பிரிவில் ஷாஷினி புவி என்ற குழந்தை 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.2-ஆம் இடம்பிடித்ததன் மூலம் சான்வி அகர்வால்,அடுத்த ஆண்டு நடைபெறும் 6 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற பின் குழந்தை சான்வி அகர்வால் அளித்த பேட்டியில்,”இதுதான் தேசிய அளவில் எனது முதல் பதக்கம்.இந்தப் பதக்கத்தை எனது 2 மாதச் சகோதரனுக்கு பரிசளிக்க விரும்புகிறேன்.எனது பெற்றோர் கணினி மூலம் செஸ் விளையாட்டைக் கற்றுக்கொடுத்தனர்.செஸ் விளையாட்டில் எனக்கு மிகவும் பிடித்தது ராஜாவும் ராணியும்தான்.ஆசிய அளவிலான தொடரில் கண்டிப்பாகச் சாதிப்பேன்”எனக் கூறினார்.

சான்வியின் தந்தை அசோக் அகர்வால்:
“கணினியில் செஸ் விளையாடப் பழகும் போது சான்விக்கு சரியாகப் பேசவும், எழுதவும் கூடத் தெரியாது.ஆனால் செஸ் விளையாட்டை புத்திக்கூர்மையுடன் விரைவில் கற்றுக்கொண்டாள்.தன்னை விட மூத்த வயதுடையவர்களுடன் விளையாடி வெற்றி பெற்றுள்ளதால் அவளுக்குச் சிறப்பாக செயல்படுவதற்கான ஊக்கம் மேலும் அதிகரித்துள்ளது” என அசோக் அகர்வால் தெரிவித்தார்.

சான்வியின் தாயார் திவ்யா :
வீட்டில் நான் பொழுது போக்கிற்காக செஸ் விளையாடிதைக் கண்டு,மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொண்டாள்.எனது மகனுக்கு 2 மாதங்கள் ஆவதால் என்னால் தும்கூருக்குச் செல்ல முடியவில்லை.இருப்பினும் பதக்கத்துடன் திரும்புவேன் என்று சான்வி கூறியதை தற்போது நிறைவேற்றிவிட்டாள் என்று திவ்யா கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: