புதுதில்லி,
நாடு முழுவதும் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்,  சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 20-ம் தேதி முதல்,  லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.  லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், சரக்குகள் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் மத்திய  தரைவழி போக்குவரத்து துறை செயலாளர்  மாலிக்குடன் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டுள்ளதாக அகில இந்திய மேட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து லாரிகள் வழக்கம் போல் இயங்கத்துவங்கி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: