புதுதில்லி :

வட இந்திய மாநிலங்களில் பருவமழை பெருகி வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளன. தில்லி சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அரியானா மாநிலத்தின் ஹத்னிகுந் தடுப்பணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை அதன் அபாய அளவான 204யும் தாண்டியுள்ளது என நீர் வடிகால் மற்றும் வெள்ள கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். ஹத்னிகுந் தடுப்பணையிலிருந்து மணிக்கு 2,11,874 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது மற்றும் நீர் திறப்பின் அளவு அதிகரிக்கப்படலாம் என அவர்கள் தெரிவித்தனர். மேலும், கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: