மத்திய அரசு தனது வாக்குறுதிகளை செயல்படுத்த தவறி வருவதால் அனைத்து பி.எஸ்.என்.எல் சங்கங்களும் மற்றும் அமைப்புகளும் கடந்த ஜூலை 24 முதல் ஜூலை 26 வரை மூன்று நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தைத் நடத்தின. தற்போது தொடர்ந்து சுற்று வகையிலான உண்ணாவிரத போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க நிர்வாகி ஸ்வபன் சக்கரபோட்டி கூறியபோது, கடந்த பிப்ரவரி மாதம் 24 தேதி நடந்த அனைத்து சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சு வார்த்தை கூட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்கா பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு 3ம் ஊதிய சீராய்வு, பி.எஸ்.என்.எல் அளிக்க வேண்டிய ஓய்வூதிய தொகையை வழங்குவது என பல போராட்டங்களுக்கு பின் அளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

அமைச்சர் உறுதியளித்து 5 மாதங்கள் ஆன நிலையில் அளிக்கப்பட்ட ஊவ்ழியர்களின் கோரிக்கைகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, BSNLEU, SNEA, NFTE மற்றும் AIBSNLEA என அனைத்து சங்கங்களும், அமைப்புகளும் ஒன்றாக ஏற்படுத்திய பி.எஸ்.என்.எல் அனைத்து சங்கங்கள் மற்றும் அமைப்புகள் என்ற கூட்டமைப்பு சுற்று வகையிலான தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கவுள்ளன. அதுமட்டுமின்றி பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4G அலைக்கற்றை அளிக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், மத்திய அரசு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நஷ்டம் அடைவதாக கூறி மறுத்து வருகிறது. இவ்வாறான இடர்ப்பாடுகளுக்கும் இடையில் பி.எஸ்.என்.எல் சிறந்த சேவை ஆற்றி வருகிறது என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: