புதுக்கோட்டை;
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அக்னியாற்றின் மேல் தொட்டிப்பாலம் போல உள்ள மேம்பாலத்தில் தண்ணீர் சென்றது. இந்தக் கண்கொள்ளா கட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஈச்சுவிடுதியில் பல கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள அக்கியாற்றின் குறுக்கே 41 தூண்கள் வைத்து பல மீட்டர் தூரம் வரை கடந்த 1939-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இதில், கீழ் பகுதியில் அக்னியாறும், மேல் பகுதியில் உள்ள பாலத்தில் கல்லணையில் இருந்து வரும் தண்ணீரும் செல்லும் வகையில் தொட்டி போல பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருவேறு துருவங்களில் செல்லும் இந்த நீர்வழிப் பாதைகளில் தண்ணீர் செல்வது மிகவும் அரிதாகவே நடைபெறும். மழைபெய்தால் மட்டுமே அக்னியாற்றில் சில நாட்களுக்கு தண்ணீர் வரும்.

மேலே உள்ள பாலத்தில் தண்ணிர் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி கல்லணைக் கால்வாயிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரிநீர் கடைமடைப் பகுதியாக உள்ள இந்தப் பாலத்தின் வழியாகவும் சென்றது. கிழக்கு மேற்கிலும், தெற்கு வடக்கிலும் இருவேறு துருவங்களில் அக்னி ஆற்று நீரும், காவிரியும் ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் கண்கொள்ளா காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமையன்று காலையில் இந்தப் பாலத்திற்கு வருகைதந்த தண்ணீர் ஈச்சன்விடுதியை அடைந்தது. நீர் வரத்து அதிகரித்ததும் அங்குள்ள தடுப்பணையில் தேங்கியது. பின்னர், அங்கிருந்து பாசன வாய்க்கால்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்தத் தண்ணீர் நெடுவாசல், மேற்பனைக்காடு, நாகுடி வழியாக கறம்பக்குடி ஒன்றியத்தில் தொடங்கி, மணமேல்குடி ஒன்றியம் வரை 60 ஆயிரம் ஏக்கர் வரை உள்ள பாசன பகுதிளுக்குச் செல்ல உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.