அரசியல் ஆய்வாளர் ஒருவர் நேற்று ஜார்கண்ட் மாநிலத்திலிருக்கும் தேவ்கர் நகருக்கு பணி நிமித்தமாகச் சென்றார். அரசு நடத்தும் பயணியர் விடுதியில் தங்கிய அவர் காலையில் அங்கிருக்கும் கேண்டீனுக்குச் சென்று ஆம்லேட் ஆர்டர் செய்திருக்கிறார். உடனே சுமார் 40 பேர் கொண்ட கும்பல் அவரைச் சுற்றி வளைத்து, இந்தப் புனிதமான மாதத்தில் நீ எப்படி ஆம்லேட் சாப்பிடலாம் என்று மிரட்டியது. அவருடைய பெயரைக் கேட்டு அவர் கிறிஸ்துவர் என்றறிந்து கொண்ட அந்தக் காவி கும்பல் அவரை அடிக்கத் துணிந்தது. அவர் அறிந்த ஒரு பிஜேபி நண்பரை அவர் தொலைபேசியில் கூப்பிட்டவுடன் அவர் அந்தக் கும்பலிடமிருந்து அரசியல் ஆய்வாளரைக் காப்பற்றியிருக்கிறார். 

நாம் நினைப்பதற்கு மேல் அபாயகரமாயிருக்கிறது வட இந்திய மாநிலங்களின் நிலைமை.

Vijayasankar Ramachandran

Leave A Reply

%d bloggers like this: