உ.பி.யை புரட்டிப்போட்ட மழை
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கன
மழையினால் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு செய்தித்
தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நிரம்பியது இடுக்கி அணை
இடுக்கி:
கேரளாவில் பெய்த கனமழையால் இடுக்கி அணையில் தற்போது 2,392 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. அணையின் முழுக்கொள்ளளவு 2,403 அடி ஆகும்.இதில் 2,400 அடியை தொட்டதும் தண்ணீர்திறந்து விடப்படும். 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்தபிரம்மாண்ட அணை மீண்டும் திறக்கப்படவுள்ளது.

அரிய கடல் உயிரினம்
புதுக்கோட்டை:
அழிந்துவரும் அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல்பசு,புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதியான மணல்மேல்குடியில் மீனவர்களின் வலையில் சிக்கியது. இந்த கடல்பசு மீண்டும் கடலில் விடப்பட்டது.

முதல் முறையாக இழப்பீடு வழங்கிய ரயில்வே தீர்ப்பாயம்
சென்னை:
ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு முதல் முறையாக ரயில்வே தீர்ப்பாயம் இழப்பீடு வழங்கியுள்ளது.சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 8 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது ரயில்வே தீர்ப்பாயம். பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அவர்களின் குடும்பத்தாரோ எந்த ஒரு முறையான விண்ணப்பமும் செய்யாமல் ரயில்வே தீர்ப்பாயம் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.