தீக்கதிர்

திருவாரூர்: 150 பேருக்கு வாந்தி மயக்கம்

திருவாரூர் அருகே கோயில் பிரசாதம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
திருவாரூர் அருகே உள்ள குவளைக்கால் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது கோயிலில் கொடுக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 150 பேருக்கு கோயிலிலேயே சிகிச்சையளிக்க 5 மருத்துவக்குழு செயல்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதம், தண்ணீரை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் எடுத்துச்சென்றுள்ளனர்.