பனாஜி;
சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், கொங்கணி மொழி எழுத்தாளருமான தாமோதர் மவ்ஸோவிற்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக, அம்மாநில சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை 10 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலங்களையும் பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கவுரி லங்கேஷைப் போல, கொங்கணி மொழி எழுத்தாளரான தாமோதர் மவ்ஸோவையும் கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தோம் என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, பெங்களூரு போலீசார் அளித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, எழுத்தாளர் தாமோதர் மவ்ஸோ-விற்கு கோவா போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.எழுத்தாளர் தாமோதர் மவ்ஸோ கொங்கணி மொழியில் இலக்கியம் படைத்து வருபவர். கோவாவின் அதிகாரப்பூர்வ மொழியாக கொங்கணியையும் சேர்க்க வேண்டும் என்ற போராட்டத்தையும் தீவிரமாக மேற்கொண்டவர். கோவா 2010-இல் கலை மற்றும் இலக்கிய விழாவின் இணை நிறுவனர் மற்றும் இணை பொறுப்பாளராக செயல்பட்டவர். அத்துடன் 1983ல் வெளிவந்த இவரது ‘கார்மெலின்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.