புதுதில்லி;
கல்வித்துறை வளர்ச்சியில் கேரளம் நாட்டுக்கே முன்னுதாரமாக விளங்குவது குறித்து தேசிய ஊடகமான என்டிடிவி உண்மையான சோதனை ()ரியாலிட்டி செக்) என்கிற விவாத நிகழ்ச்சியை வியாழனன்று நடத்தியது. அதில் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாகய முன்னணி கேரளத்தில் மேற்கொண்டு வரும் திட்டங்களை முன்னிறுத்தி இந்த விவாத நிழ்ச்சி நடந்தது.

இந்த விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ராஜேஷ், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அம்மனதுல்லா கான், கல்வியாளர் அசோக் அகர்வால், ஆம் ஆத்மி பிரமுகர் ஹர்தேசி மலேயன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நெறியாளராக சுனித்ரா சவுத்ரி இருந்தார்.

கேரளத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கேரள அரசு மேற்கொண்ட நிலைபாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்பதாக விவாதம் தொடங்கியது. கேரளம் கல்வித்துறையில் சாதித்துள்ளவற்றை விளக்கி விவாதம் தொடர்ந்தது
கடந்த 2 ஆண்டுகளில் கேரளத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 6.3 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த கால அளவில் அரசுப்பள்ளிகளிலிருந்து விலகல் என்பதே முற்றிலும் இல்லை என்பதை என்டிடிவி தயாரித்திருந்த செய்தி அறிக்கை தெளிவுபடுத்தியது.

கேரளத்தின் மக்கள் பிரதிநிதிகள் கல்வித்துறையை வலுப்படுத்துவதற்காக தமது குழந்தைகளை அரசுப்பள்ளிகயில் சேர்த்துள்ளதையும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ராஜேஷின் இரண்டு குழந்தைகளும், அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணனின் இரண்டு பேரக்குழந்தைகளும், வி.டி.பல்ராம் எம்எல்ஏவின் மகளும் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை விவாதத்தில் சுட்டிக்காட்டினார்கள். பொதுக்கல்வியை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாகவே தனது இரண்டு பேரக்குழந்தைகளையும் அரசுப்பள்ளியில் சேர்த்ததாக அமைச்சர் தெளிவு படுத்தினார். பொது செயற்பாட்டாளர்களின் இந்த நடவடிக்கை அவர்களுக்கு மிகுந்த மரியாதையை பெற்றுத்தந்திருப்பதாக விவாத்தில் தெரிவித்தனர்.

கேரளத்தில் 45ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டதும், இதில் மடிகணினி, இணையத் தொடர்பு, புரொஜக்டர் போன்றவை ஏற்படுத்தப்பட்டதும் விவாதிக்கப்பட்டன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு அரசுப்பள்ளியை தேர்வு செய்து அதை உயர்தரத்துக்கு கொண்டு வரும் முயற்சி தொடர்கிறது. இதற்காக 149 பள்ளிக்கூடங்களை தேர்வு செய்து, ஒவ்வொரு பள்ளிக்கும் 5கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தில்லியில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் தயங்கி வரும் நிலையில் கேரளத்தில் அதுபோன்ற நிலை இல்லை எனவும், இதில் கேரளத்தின் கல்வித்துறை முன்மாதிரி எனவும் விவாதத்தில் பங்கேள்ள கல்வியாளர் அசோக் அகர்வால் கூறினார்.
கேரளத்தின் கல்வித்துறையை வலுப்படுத்த இடதுசாரி அரசு நல்ல முறையில் முயன்று வருகிறது. ஆனால், மத்திய அரசு தரப்பிலிருந்து சாதகமான நடவடிக்கை ஒன்றும் நடைபெறவில்லை என எம்.பி.ராஜேஷ் விவாதத்தின் இறுதியில் குறிப்பிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.