வாரனாசி :

உத்தரப்பிரதேசத்தில் பெய்து பருவமழையினால் அம்மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் பகுதியில் 6 பேரும், ஆக்ராவில் 6 பேரும், மயின்புரியில் 4 பேரும், கஸ்கஞ் பகுதியில் 3 பேரும் மற்றும் பரேய்லி, பக்பாத், காசியாபாத், ஜவுன்பூர், கான்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், சஹரன்பூர் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 11பேர் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்பு உதவிகளை மற்றும் மருத்துவ உதவிகளை அதிகரிக்க மக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: