கொல்கத்தா :

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் ஒமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை அமைப்பது ஏற்கனவே பேச்சு வார்த்தையில் உள்ள ஒன்றாகும் மற்றும் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட சோனியா காந்தி துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் மற்றும் இது சிறந்த வடிவத்தை விரைவில் அடையும் என அவர் கூறினார். ஒரு வலிமையான நாட்டிற்கு வலிமையான கூட்டணி தேவைப்படுகிறது. இந்தியா தற்போது எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று கூட வேண்டும் என நேற்று மேற்கு வங்க முதல்வரைச் சந்தித்த ஒமர் அபுதுல்லா பத்திரிக்கையாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: