பெங்களூரு;
அறிவுஜீவிகளை, முற்போக்குவாதிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ பசன கவுடா பாட்டீல் யத்னா பேசியிருப்பதற்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.‘மோட்டார்வாய் வைத்துள்ள மற்றொரு முட்டாள் யத்னாவே, உங்களால் மூளைச்சலவை செய்யமுடியாத, அறிவுஜீவிகளையும், முற்போக்குவாதிகளையும் உங்களைப் போன்றவர்கள் இப்படித்தான் (கொலை) செய்கிறீர்கள்’ என்று கூறியிருக்கும் பிரகாஷ் ராஜ், ‘ஹிட்லர், கடாபி, பின்லேடன் போன்றோர் மண்ணோடு மண்ணாகப் போனதை இந்த உலகம் ஏற்கெனவே பார்த்திருக்கிறது’ என்றும் எச்சரித்துள்ளார்.

‘மேலும், ‘உங்கள் கட்சி உறுப்பினர்களின் வாயை மூடச் சொல்லுங்கள் அல்லது தொடர்ந்து மவுனமாக இருக்கச் சொல்லுங்கள்.’ என்று பிரதமர் மோடியையும் பிரகாஷ் ராஜ் இடித்துரைத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.