அலகாபாத் :

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டிய அலகாபாத் பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் மாணவர் ஒருவர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜனநாயக படுகொலை என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் நகருக்கு பாஜக தலைவர் அமித்ஷா வருகை புரிந்தார். அவர் வரும் வழியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தினுள் புகுந்து நேகா யாதவ், ராமா யாதவ் என்ற இரு மாணவிகளும் கிஷான் மயூரியா என்ற மாணவரும் கருப்புக்கொடி காட்டினர். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பிலிருந்த ஆண் காவலர் ஒருவர் அம்மூவரையும் தனியே இழுத்துச் சென்று கடுமையாக தாக்கினார்.

மாணவி ஒருவரின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று தனது லத்தியால் காவலர் தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான ரிச்சா சிங் மாணவிகள் மீது காவலரின் அத்துமீறிய செயல் மற்றும் அங்கு பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இல்லாத நிலை கடும் கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். மேலும், பெண் மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியது சட்டவிரோத செயல் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: