தஞ்சாவூர்;
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் வெள்ளி மீன்கள் வரத்து அதிகரித்துள்ளன. இந்த மீன்கள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் துறைமுக பகுதி மீனவர்கள், தொடர்ந்து வெள்ளி மீன்களை பிடிப்பதற்கு மட்டும் அதற்கு உண்டான வலைகளை பயன்படுத்தி கடலுக்குச் சென்று மீன்களை பிடித்து வருகின்றனர். வருடம் முழுவதும் இந்த மீன்கள் அகப்படும். மழைக்காலத்தில் அதிகமாக அகப்படும்.

இப்போது வெள்ளி மீன்கள் வரத்து அதிகரித்துள்ளன. இரண்டு மாதத்திற்கு முன்பு 1 கிலோ ரூ.150-க்கு விற்பனையானது. இப்போது 1 கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இங்கு பிடிபடும் மீன்கள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகின்றன. உள்ளூரிலும் இந்த மீன்களை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுவர். இப்போது இந்த மீன்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர் சங்கர் கூறுகையில், “இந்த மீன்களுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. வெள்ளி மீன், தேசப்பொடி, வெள்ளைப்பொடி, பொடிமீன், கேரளாவில் மட்லீஸ் என பல்வேறு பெயர்களை வைத்து அழைக்கின்றனர். கேரளாவில் இந்த மீனுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இங்கு பிடிபடும் மீன்கள் ஏஜெண்ட் மூலம் கேரளாவுக்கு ஏற்றுமதியாகின்றன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் வெள்ளி மீன்களை வைத்து மீன் குழம்பு வைக்கின்றனர் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.