வேலூர்,
வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி மலையில் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு போதுமான பேருந்து வசதி கிடையாது. மேலும் ஒரே ஒரு சிற்றுந்து மட்டுமே சென்று வருகிறது. இதுவும் குறிப்பிட்ட நேரங் களில்தான். இதனால் மலைப்பகுதிக்கு செல்லும் மக்கள், அந்த வழியே எந்த வாகனம் சென்றாலும், அதில் இடம் கேட்டு ஏறி செல்வது வழக்கம்.  ஆம்பூரிலிருந்து ஒரு டிராக்டர் ஹாலோ பிளாக் கல்,சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக் கொண்டு நாயக்கனேரி மலை கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தது. நாயக்கனேரி மலைக்கிராமத்தை சேர்ந்த 4 பேர் அந்த டிராக்டரில் ஏறி, ஹாலோ பிளாக் கல் மீது அமர்ந்து சென்றுள்ளனர். டிராக்டர் மலைப் பாதையில் மேடான ஒரு வளைவில் திரும் பும் போது, பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் பின்னோக்கி வந்துள்ளது. அப்போது திடீர் என்று டிராக்டர் என்ஜின் மேல்நோக்கி தூக்கிய போது, ஹாலோ பிளாக் கற்கள் சரியத்தொடங்கியது. இதில் அமர்ந்திருந்த 4 பேரும் கீழே விழுந்து டிராக்டருக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.

இதில், பொன்னுசாமி (61), சிங்காரம் (63)  ஆகிய 2 பேரும் ஹாலோ பிளாக் கற்கள் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சின்னசாமி (65), பட்டு,ஓட்டுநர் உமாபதி ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தில் பலியான பொன்னுசாமி, சிங்காரம்  ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாயக்கனேரிக்கு செல்லும் மலைப்பாதை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அதனை சீரமைத்து அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: