தீக்கதிர்

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து…!

எந்தவொரு பிரச்சனைக்கும் காரணத்தை தேடுகிற அறிவியலின் மீதும் பகுத்தறிவின் மீதும் மோடி அரசாங்கம் மிகப்பெரும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்த திட்டமாகும். இதை நிறைவேற்றுவதற்காக இந்திய உயர்கல்வியின் மூன்று அம்சங்களை – உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பது, தரம் என்ற பெயரில் எளிய மக்களை கல்விபெற முடியாமல் தடுப்பது, இடஒதுக்கீட்டை முற்றாக மறுத்து கல்வியில் சமவாய்ப்பை நிராகரிப்பது – ஆகிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் இந்திய உயர்கல்வி ஆணைய மசோதாவை மோடி அரசு முன்மொழிந்துள்ளது.

ஒரு நாட்டை அழிப்பதற்கு வெளியிலிருந்து எதிரி வரவேண்டிய அவசியமில்லை; அந்த நாட்டின் கல்விக்கட்டமைப்பை மக்களுக்கு எதிரானதாக மாற்றி அமைத்தாலே அந்த நாட்டினை அழித்துவிட முடியும். அதைத்தான் இப்போது மோடி தலைமையிலான பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே உயர்கல்வி ஆணைய மசோதாவை முற்றாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி பிரதமருக்கு எமது கட்சியின் சார்பில் கடிதம் எழுதியுள்ளோம். தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம்.