பாட்னா :
பீகாரில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம் அருகே இருக்கும் சிகாந்த்ரா எனும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரி மோதி  கார் விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில் நேற்று பிறந்த பெண் குழந்தை மட்டும் விபத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Leave A Reply

%d bloggers like this: