திருநெல்வேலி:
நெல்லையில் சனிக்கிழமை (ஜூலை 28) தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் அனைத்து கிறிஸ்தவ பெருமக்கள் கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.
பாளை. நூற்றாண்டு மண்டபம் அருகில் உள்ள நேருஜி கலையரங்கில் இந்த மாநாடு சனிக்கிழமை மாலை 4 மணிக்கு துவங்குகிறது. மாநாட்டிற்கு, இந்திய தலித் கிறிஸ்தவ நல இயக்கத் தலைவர் தனராஜ் தலைமை தாங்குகிறார்.

இதில், கேரள அரசின் சிறுபான்மைத் துறை அமைச்சர் ஜலீல், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி நிர்வாகி பாலபிரஜாதிபதி அடிகளார், மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜாமொய்னுதீன் பாகவி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு தலைவர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.நூர்முகம்மது, பொதுச்செயலாளர் மாரிமுத்து, பாதிரியார் அந்தோணி குரூஸ் அடிகளார், டிடிடிஏ செயலாளர் வேதநாயகம், முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: