சென்னை
விரைவில் நலம் பெறுவார்
“சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவ தால் கருணாநிதி விரைவில் உடல்நலம்பெறு
வார். நலம் பெற்று அவரே அனைவருக்கும் நன்றி கூறுவார் என நம்புகிறேன். அவரின்
உடல்நலம் குறித்து விசாரித்த மோடி,ராகுல், சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோ ருக்கு நன்றி’’ என மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்திருக்கிறார்.

சென்னை
குவியும் தொண்டர்கள்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக் குறைவால் வியாழன் மாலை முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கோபாலபுரம் இல்லத் திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுடன் திமுக தொண்டர்களும் சாரை சாரையாக வந்துகொண்டே உள்ளனர். கருணா நிதியின் கோபாலபுரம் இல்லத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை
‘ஏழுமலையான் நிரப்பினார்’
“நான் திருப்பதி ஏழுமலையானிடம் மேட்டூர் அணையில் தண்ணீர் 120 அடி நிரம்ப வேண்டும் என்று வேண்டினேன். அதைச் சில அரசியல் கட்சித் தலைவர்கள் கிண்டல் செய்தார்கள். ஆனால், ஏழுமலை யானின் அருளால் இன்று மேட்டூர் அணை 120 அடியைத் தாண்டி நிரம்பி வழிகிறது’’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு
இவருக்கும் ஏழுமலையான்
‘‘காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ,நீதிமன்றத்தின் மூலமாகவோ எந்தத் தீர்வும் காண முடியாது.இந்த பிரச்சனையில் கலந்தாலோசித்து நல்ல தீர்வை எட்ட
தமிழக தலைவர்கள் முன்வர வேண்டும்.அதற்கு அவர்களுக்கு நல்ல புத்தியை வழங்க
வேண்டும் என நான் ஏழுமலையானை வேண்டிக்கொண்டுள்ளேன்’ கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.