திருப்பூர்,
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வரம்பை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு மாற்ற முயற்சிப்பதாக தொழில் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) பொதுச் செயலளர் கே.எஸ்.பாபுஜி வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் குறித்து ஆண்டு வர்த்தக அடிப்படையில் நிறுவனங்களை நிர்ணயம் செய்வதற்கான சட்டங்கள் ஏற்றப்படுகிறது. சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அவற்றின் முதலீட்டு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு நிறுவனத்தில் இயந்திரங்கள் ரூ.25 லட்சத்திற்கு உட்பட்டு இருந்தால் அவை குறு நிறுவனங்களாகவும், ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடிக்கு உட்பட்டவை சிறு நிறுவனங்களாகவும், ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடிக்குஉட்பட்டவை நடுத்தர நிறுவனங்களாகவும் நிர்ணயிக்கப்படுகின்றன. பெரும் தொழில் நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தி விட்டு சிறு, குறு நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்களையோ, அவர்களது சங்கத்தினரிடமோ ஆலோசனை பெறாமல் புதிய சட்ட திருத்த மசோதாவை அத்துறையின் இணை அமைச்சர் கிரிராஜ் சிங் மக்களையில் 23ம் தேதி தாக்கல் செய்துள்ளார். புதிய சட்ட திருத்த மசோதாவின்படி வர்த்தகம் ரூ .5 கோடிக்கு உட்பட்ட நிறுவனங்கள் குறு நிறுவனங்களாகவும், ரூ. 5 கோடிக்கு மேல் ரூ.75 கோடிக்குள் ஆண்டு வர்த்தகம் உள்ளவை சிறு நிறுவனங்களாகவும், ரூ.75கோடி முதல் ரூ.250 கோடிக்குள் ஆண்டு வர்த்தகம் உள்ளவை நடுத்தர நிறுவனங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த மசோதாவில் குறு, சிறு நிறுவனங்கள் பாதிப்படையும் என்று அச்சம் எழுந்துள்ளது.
இதனால் சுய தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை குறையும். ரூ25 லட்சம் முதல் ரூ.1 கோடி முதலீடு செய்பவர்களை என்ன பெயர் வைத்து அரசு சலுகைகள் வழங்கவுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாபெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சியடைய வழிவகை செய்துள்ளது. சிறு குறு நிறுவனங்களை யாரும் அழிக்காமல் தானாகவே
அழிந்துபோகும் நிலை இம்மசோதாவால் எளிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இம்மசோதாவில் உள்ள சிறு, குறு என்ற பெயரை பயன்படுத்தி பெரும் நிறுவனங்களை வளர்ச்சியடைய அரசு துணை போகின்றது என்ற கலக்கம்மெய்யான சிறு, குறு நடுத்தர தொழில் புரிவோரிடம் ஏற்பட்டுள்ளதை போக்கி இதில் உள்ள குளறுபடிகளை ஆய்வு செய்யும் வரை இந்த மசோதாவை அமல்படுத்த வேண்டாம் என்றும், எங்களின் நிலையை எந்த அடிப்படையில் அரசு வைத்துள்ளது? சிறு, குறு நிறுவனங்கள் என்ற பெயரில் வங்கிகளில் 25 லட்சம் ரூபாய் முதல் 1 கோடிவரை கடன் பெறுவதில் ஆவணங்கள் தாக்கல் அடிப்படையில் கடன் பெற முடியாத சூழலை இம்மசோதா காட்டுகிறது. கடன் கேட்கச் சென்றாலே ரூ.5 கோடிக்கும் மேல் கடன் பெறும் சூழலை அரசு ஏற்படுத்தினால் அதற்காக சொத்து மதிப்பு ஆவணங்கள் தாக்கல் செய்ய அந்த அளவுக்கான பெரும் சொத்துள்ளவர்களே கடன் பெற முடியும் என்பதால் இந்த மசோதாவை திருத்தம் செய்து அமல்படுத்த வேண்டும் என்று தொழில்துறை சார்பாகவும், தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) சார்பாகவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.