பெர்லின்:
ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் நடுகள வீரராக விளையாடி வந்த துருக்கி வம்சாவளியினரான மெஸுட் ஒஸில்,கடந்த மே மாதம் துருக்கி அதிபர் எர்டோகனை சக வீரர் கண்டோகனுடன் இணைந்து சந்தித்தார்.சந்திப்பின் போது மெஸுட் ஒஸில் அர்செனல் அணி ஜெர்சியை எர்டோகனுக்கு பரிசாக அளித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு,அந்தப் புகை படத்தை இன்ஸ்டாகிராம் வழியாகப் பதிவிட்டார்.இது சாதாரண விசயம் என்றாலும்,மே இரண்டாம் வாரத்தில் எர்டோகன் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்தப் புகைப்படத்தை அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்த பிரச்சனை சூடு சூடு பிடித்தது.இந்தச் சர்ச்சையை கண்டுகொள்ளாத ஜெர்மனி பயிற்சியாளர் உலகக் கோப்பைக்கான அணியில் மெஸுட் ஒஸில் பெயரை அறிவித்தார்.

குரூப் சுற்றோடு ஜெர்மனி அணி வெளியேற,தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யாமல்,ஒஸிலுக்கு ஜெர்மனி அணியில் விளையாடுவது பிடிக்கவில்லை இதனால்தான் தொடக்க சுற்றிலேயே வெளிறினோம் என அணியில் உள்ள பல முன்னணி வீரர்கள் அடுத்த சர்ச்சையை கிளப்பி விட,ஜெர்மனி அணியில் இனப்பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது எனக்கூறி மெஸுட் ஒஸில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.மெஸுட் ஒஸில் குற்றச்சாட்டை மறுத்த ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு, இனப்பாகுபாட்டிற்கு ஒரு போதும் துணை நிற்காது என அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், மெஸுட் ஒஸில் குற்றச்சாட்டு மற்றும் அவரது ஓய்வு முடிவு குறித்து ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு தலைவர் கிரிண்டல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”எங்கள் அணி நிர்வாகத்தில் இனவெறி இல்லையென்றாலும் தவறு நடந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து கிரிண்டல் மேலும் கூறியதாவது,”ஜெர்மனி பல இனம் கலந்த நாடு என்பதால் இங்கு இனவெறிக்கு இடமில்லை.எந்த நிலை வந்தாலும் இனவெறிக்குத் துணை நிற்கமாட்டோம்.ஆனால் உலகக்கோப்பை தோல்விக்கு பின் ஒஸிலுக்கும் அணி நிர்வாகத்திற்கும் மோதல் போக்கு உருவானதை இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.தோல்விக்கான மோதல் போக்கை இனவெறியாக ஒருபோதும் ஏற்கமாட்டோம்.மெஸுட் ஒஸில் தனது முடிவை மாற்றிக்கொண்டு,மீண்டும் அணிக்குத் திரும்பினால் அவரை மனமகிழ்ச்சியுடன் அழைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டு விதமான அறிக்கைக்குப் பின்னரும் மெஸுட் ஒஸில் தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.