ஹைதராபாத் :

ஐதராபாத்தின் ஜூப்லி ஹில்ஸ் என்ற பகுதியில் நடந்த அதிரடி சோதனையில் ஒற்றை அறையில் 114 கம்பெனிகள் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. இந்த 114 கம்பெனிகளும் தற்போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ள சத்யம் ஊழல் வழக்குக்கு தொடர்பானவை என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் சத்யம் கம்யூட்டர் சர்வீஸ் என்ற நிறுவனம் சுமார் 14.5 ஆயிரம் கோடி அளவிலான ஊழல் செய்ததாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த உழல் வழக்கை  சிபிஐ விசாரித்து வருகிறது.  விசாரணையில் சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ராமலிங்கம் ராஜூவுக்கு சொந்தமான ஒற்றை அலுவலகத்தில் இயங்கி வந்த எஸ்.ஆர்.எஸ்.ஆர் எனப்படும் நிதி ஆலோசனை நிறுவனத்துக்குச் சொந்தமான 114 கம்பெனிகள் ஐதராபாத் பதிவுத்துறையால் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்நிறுவனங்கள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என விசாரணை ஆதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: