இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்தான் பயங்கர வாதம்,  பாலியல் பலாத்காரம் அதிகரிப்பதற்கு காரணம் என்று விஷமத்தனமாக பாஜக எம்பி ஹரி ஓம் பாண்டே  பேசியிருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கார் நகர் தொகுதியின் எம்.பி.யான ஹரி ஓம் பாண்டே பேசுகையில், பயங்கரவாதம், பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லைகள் போன்ற கொடூரங்கள் இந்தியாவில் அதிகரிப்புக்கு காரணம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்புதான். கூர்ந்து பார்த்தீர்கள் என்றால் சுதந்திரத்திற்கு பின்னர் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது தெரியும். அதிகமான மக்கள் தொகையால் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிப்பை ஏற்படுத்துகிறது, இது இந்தியாவை அராஜக பாதைக்கு எடுத்துச் செல்லும். இஸ்லாமியர்கள் 3-4 திருமணம் செய்கிறார்கள், 9-10 குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு கல்வியை கொடுக்க முடியவில்லை, இதனால் வேலையில்லாத நிலை ஏற்படுகிறது. இது அராஜகத்திற்கு வழிவகை செய்கிறது என்று முற்றிலும் உண்மைக்கு புறம்பாக விஷமத்தை காக்கியிருக்கிறார்.
இது போன்று நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் ஒரு எம்.பி. பேசியிருக்கிறார். அவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.