இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் இன்று இரவு உலகம் முழுவதும் தெரியும் வகையில் நிகழ இருக்கிறது. இந்தியாவில் இன்று இரவு 10.44 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.58 வரை தெரியும். சந்திர கிரகணத்தின் ஒரு பகுதியாக முழு சந்திர கிரகணம் நிகழும்.
பூமியின் நிழல் முழுமையாக நிலவின் மீது விழும்போது, சிறிய அளவு சூரிய ஒளி நிலவின் மீது படும். ஆனால், இந்த சூரிய ஒளி, பூமியின் காற்று மண்டலத்தைத் தாண்டி தான் நிலவின் மீது விழும். எனவே சூரியனின் நீல கதிர்கள் தடுக்கப்பட்டு, சிவப்பு கதிர்கள் மட்டும் நிலவின் மீது விழுவதால், நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதுவே பிளட் மூன் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பிளட் மூன் இரவு 1 மணி முதல் 2.43 மணி வரை தெரியும். இந்தியாவில் மொத்தம் 103 நிமிடங்கள் அதாவது 1 மணி நேரம் 43 நிமிடங்கள் நீடிக்கும். இந்த காலகட்டத்தை ‘டோட்டாலிட்டி’ என்று குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் டெல்லி, மும்பை, புனே மற்றும் பல நகரங்களில் சந்திர கிரகணம் தெரியும். பருவமழைக் காரணமாக, சந்திர கிரகணம் பார்ப்பதில் சற்று இடர் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தெளிவாக தெரியும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இந்த  சந்திர கிரகணத்தை வெறும் கண்ணில் பார்க்கலாம். எந்த தீங்கும் இல்லை.

Leave A Reply

%d bloggers like this: