சேலம்,
நிர்வாக குழுவை செயல்படவிடாமல் தடுக்கும் இண்ட் கோ சர்வ் சொசைட்டி செயலாளரை கண்டித்து சிஐடியு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் உருக்காலை டாக்டர் அம்பேத்கர் சொசைட்டி நிர்வாக குழுவை செயல்படவிடாமல் தடுப்பதுடன், சுமார் எட்டு லட்சம் வரை கையாடல் செய்த சொசைட்டியின் செயலாளர் லோகநாதனை கண்டித்து சேலம் உருக்காலை கேட் எண் 3ல் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் ஸ்டீல் பிளான்ட் இண்ட்கோ சர்வ்சொசைட்டி காண்ட்ராக்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கே.சி.கந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன், மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம், ராமமூர்த்தி, உருக்காலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் முழுவதும் வேலை வழங்காமல் எஸ்எம்எஸ் பகுதியில் சுயற்சி முறையில் பணி வழங்குவதை கைவிட வேண்டும். வயது முதிர்வை காரணம் காட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி ஓய்வளிக்கப்பட்ட 35 பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிகொடையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.