திருப்பூர்,
திருப்பூர் ஒன்றியம் இடுவாய் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் திருப்பூர் மாவட்ட சிஐடியு மோட்டார் தொழிலாளர் சங்க இடுவாயில் புதிய கிளை உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வியாழனன்று மாலை புதிய பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டு செங்கொடி ஏற்றப்பட்டது.

சிஐடியு மோட்டார் சங்க மாவட்டச் செயலாளர் ஒய். அன்பு பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார். சிஐடியு பனியன் சங்கத் தலைவர் சி.மூர்த்தி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் பி.முத்துசாமி, சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல நிர்வாகிகள் செல்லதுரை, என்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உரையாற்றினர். புதிதாக சங்கத்தில் இணைந்த மோட்டார் தொழிலாளர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: