பெங்களூரு;
அறிவுஜீவிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பசனகவுடா கொலைவெறியை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.கர்நாடக மாநிலம் பீஜப்பூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கும் பசனகவுடா பாட்டீல், தனது தொகுதியில் கார்க்கில் போர் நினைவையொட்டி விழா ஒன்றைக் கொண்டாடியுள்ளார்.
அப்போது பேசுகையிலேயே ‘அறிவுஜீவிகள் எப்போதும் தேசவிரோதிகளாகவே இருக்கின்றனர்; நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்தால் அறிவுஜீவிகளை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டிருப்பேன்’ என்று வெறியைத் தூண்டியுள்ளார்.

மேலும், ‘இந்த அறிவுஜீவிகள் நமது நாட்டின் வசதிகளை அனுபவித்து, நமது காற்றை சுவாசித்து, தண்ணீரை அருந்துகிறார்கள்; ஆனால், நமது நாட்டிற்கு எதிராக கோஷமிடுகிறார்கள்; இவர்கள் பாகிஸ்தானை விட ஆபத்தானவர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘காஷ்மீரில் தேசவிரோதச் செயல்கள் நடைப்பெறுவதற்கு இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருதான் காரணம்’ என்று நேரு மீதும் பாய்ந்துள்ள பசனகவுடா, ‘காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்திருக்கக் கூடாது; சட்டப்பிரிவு 370-ஐ மோடி ரத்து செய்ய வேண்டும்’ என்றும் பிதற்றியுள்ளார்.பசனகவுடா பாட்டீலின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவர் மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.